Posts

Featured

உறைந்து போன “முக”வரிகள்

இது மிகச் சிறிய பதிவு தான். ஆனால் பல நாட்களாக என் சிந்தனையில் தொடர்ந்து எழுந்து, எழுதத் தூண்டிய ஒரு விஷயம். சிறு வயதில் என் அப்பா, அவர் நண்பர்களையும், அவருடன் வேலை செய்பவர்களையும் பற்றி பேசும்போது, “அவன்”, “அந்த பையன்” என்று குறிப்பிடுவார். நான் அவரை கிண்டல் செய்து சிரிப்பேன். “அப்பா, அவருக்கும் உங்க வயது தானே இருக்கும்… அவர் எப்படி பையனாக முடியும்?” என்று கேட்பேன். இன்று அதே காலகட்டத்தின் வயதை நான் அடைந்திருக்கும் போது, என் தோழிகளையும் நண்பர்களையும் நானும் “அந்த பொண்ணு”, “அவள்” என்று தான் குறிப்பிடுகிறேன். என் மகள் இதைப் பற்றி பெரிதாக கேள்வி கேட்பதில்லை. (இந்தக் காலத்தில் நாம் பேசுவதை பிள்ளைகள் கவனித்துக் கேட்கிறார்களா என்ன?!) ஆனால் இதைப் பற்றி நான் யோசிக்கும்போது, ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. என் வயதில் இருக்கும் தோழிகளும், என்னுடன் பள்ளியில் படித்தவர்களும், எனக்குள் இன்னும் அவர்களின் இளமைப் பருவ தோற்றத்திலேயே இருக்கிறார்கள். அவர்களுடன் நான் பழகிய அந்தக் காலத்திலேயே அவர்களின் உருவம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. வாட்ஸ்அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ அவர்களுக்கு செய்தி அனுப...

இட்லி சுட மாவு இல்லை

சில சமயங்களில் சில பாடல்கள்

உயிர் மொழி

The Muse Over Thengai Chutney

பதிவிடாத கடிதம்

A mind of many things