இரவு முடிந்து அந்த தூரத்து வானம் சிகப்பு தூரிகை கொண்டு ஒரு அழகிய ஓவியம் வரைந்து கொண்டு இருந்த ஒரு காலை நேரம்... மெல்லிய குளிர் உடலை தழுவ போர்வையை முகம் மேல் போர்த்தி கொண்டு கண்களை மூடினாள் திவ்யா. ஒரு முறை முழித்த பின் வரும் தூக்கம் வெறும் கனவுகளால் நிறைந்து இருக்கும்... திவ்யா கண்களை மூடி ஒரு முறை ப்ரக்காஷை நினைத்து கொண்டாள். இந்நேரம் அவன் எதிர் பார்த்த கனவு நிறைவேறி கொண்டு இருக்கும்... மலை தாண்டி கடல் தாண்டி அவன் சென்று கொண்டிருப்பான்... தன் கனவு கோட்டைகள் அங்கே உருவாக்க பட்டுவிட்டன.. இவன் சென்று அதில் குடியேற வேண்டியது தான் பாக்கி. சில நேரம் தன்னையும் அறியாமல் கண்களில் நீர் சுரக்கும்... ஆனால் ஒரு வினாடி தான்... பனித்திருந்த கண்கள் காய்ந்து விடும்... தொலைந்து போனால் கூட தேடி விடலாம் கரைந்து போனதை அடைய முடியாது. திவ்யா ப்ரக்காஷ் மனதில் இருந்து கரைந்து விட்டாள்... வெண்மேகம் வேகமாக நகர்ந்து வானத்தில் விட்ட இடைவெளிகளில் மழை துளி உதிர்ந்து கொண்டிருந்த அழகிய காலை பொழுது... மண்ணும் மழையும் காதல் கொள்ளும் அந்த அழகிய பருவத்தில் வீசும் மணல் வாசம் உடலெங்கும் படர அந்த பீச் மணலில் "திவ்யா பிரகாஷ்" என எழுதி கொண்டிருந்தாள். கால்களில் மண் ஒட்டிய சொறசொறப்பை அனுபவித்த படி பிரகாஷ் வந்து அருகில் அமர்ந்தான்... "எப்படி.. என் surprise?? Valentine டே அதுவுமா.. " சிறு புன்னகை மட்டும் பதிலாக தந்து கடலை பார்த்தாள் திவ்யா. விடிகாலை பொழுது பிரகாஷிற்கு உடம்பு முடியவில்லை என அவன் friend பெங்களூரில் இருந்து போன் செய்து தன்னை பஸ் ஸ்டாண்டிற்கு வர செய்து இவளை அதிகாலை பொழுதில் பீச்சிற்கு கடத்தி கொண்டு வந்திருந்தான் பிரகாஷ்... அவன் எப்போதுமே இப்படி தான்... எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசம்... நினைத்திராத நொடி பொழுதில் ஒரு பரிசு ஒரு surprise... பழகிய 3 மாதங்களில் பைத்தியம் போல் இவனை காதலிக்க வைத்து விட்டான். சில சமயம் சினிமா பார்ப்பது போல் தான் இருந்தது.... தனக்குள்ளே சிரித்து கொண்டாள். இன்று விடுமுறை.. ஆபீஸ் செல்ல வேண்டாம்... இன்றைய பொழுது இப்படியே கழிந்து விடும்... இவனுடைய காதல் மழையில் நனைந்து போகும் ஒரு அற்புத வாய்ப்பு... சில சனி ஞாயிறு மட்டுமே பிரகாஷ் சென்னை வருவான்... மற்ற நாட்களில் பெங்களூரில் தன் ஆபீசில் முடங்கி கிடக்கும் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர். இவனை கரம் பிடித்து 3 மாதம் ஆகி விட்டது... அரேன்ஜிடு மாரேஜில் கூட இத்தனை காதல் வயப்பட முடியுமா என சில சமயம் ஆச்சிரியமாக தான் இருந்தது திவ்யாவிற்கு. இன்னும் 2 மாதம்... தன் ஆபீசில் தனக்கு மாற்றுதல் தருவதாக சொல்லி இருக்கிறார்கள்... 2 மாதம்... 60 நாட்கள்... ஒவ்வொரு நாளும் கறை இல்லாத கடலாய்.. எல்லை இல்லாத வானமாய் நீண்ட இரவுகளும் வெருண்ட பகல்களும்... சிறு பிள்ளை போல் அடம்பிடித்த இதயம் பெங்களூரில் கால் வைத்ததும் அமைதி ஆனது...
காதலித்து மணம் முடித்தவர்கள் கூட இத்தனை ஆனந்தமாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்... விடுமுறை நாட்களில் சமைத்து அசத்துவதும், தனக்கு பிடித்த பாடல்கள் படங்கள் வாங்குவதிலும்... இன்றைய காலத்து பெண்கள் எதிர் பார்க்கும் ஒரு அன்பான கணவனாக இருந்தான்... ஆனால் உற்சாகமான மணி பொழுதுகள் உறைய கூடியவை... முக்கியமான வேலையாக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் பிரகாஷிற்கு. 3 மாதம் தான்... ஆனால் இன்னுமொறு பிரிவை தாங்க கூடிய சக்தி திவ்யாவிடம் இல்லை... வேலை விட்டு செல்லும் எண்ணமும் இல்லை... 3 மாதம் இருந்துவிட்டாள்... 4 வது மாதம் கடந்து வந்தான் பிரகாஷ்... இறுகிய முகத்தோடும் மெலிந்த தேகமாகவும் அவன் வந்தவுடன் நீட்டிய அந்த காகித கற்றை பிரித்தாள் திவ்யா...
நிச்சயமா ஒரு தொடர்கதைய நான் எதிர்பாக்கல :)
ReplyDeleteஒரு அரேஞ்ச்டு காதல் கதை. நல்ல கதைகளம். ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.