பிரகாஷின் உணர்ச்சி அற்ற முகம் திவ்யாவின் முதுகு தண்டில் சில்லிப்பை உண்டாக்கியது. விரல் நடுங்க அந்த காகித கற்றை பிரித்து படித்தாள். எழுத்துக்களை உணர முடிந்த இரண்டாவது நொடி கண்கள் பனிக்க தொடங்கியது. எதிரில் நின்றவனின் உதடுகளில் சில்மிஷ சிரிப்பு படர தொடங்கியது. 'என்ன? சந்தோஷமா?'. எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? வேண்டாம் என்ற ஒன்றும், வேண்டும் என்ற ஒன்றும் ஒரே நேரத்தில் நடக்கையில் ஆனந்தமும் அழுகையும் ஒரு சேர வருவதுண்டு. இன்னும் ஒரே வாரத்தில் இன்று வந்து இறங்கிய கணவன் மீண்டும் தன்னை பிரிந்து செல்ல வேண்டும். அவன் நினைத்த பதவியில், அவன் நினைத்த வேலையில், அவன் நினைத்த ஊரில். அவன் கனவுகள் உண்மையாகும் ஒரு அற்புத வாய்ப்பு.
'2 Months தான் திவ்யா. அப்புறம் நீயும் வந்திரலாம். நான் அரேன்ஜ் பண்றேன்.'
கண்களில் ஏக்கம் படர்ந்தது. 2 மாதமா.. இன்னும் இரண்டு மாதமா?
அன்று இரவு அவன் தோள் நனைத்தாள். தவித்தாள். அவன் பிரிவை விட அவள் தனிமை எண்ணம் அவளை வாட்டியது.
பிரகாஷ் முடிந்த அளவு அவளை சமாதான படுத்தினான்.
உலகத்தின் அத்தனை இன்பத்தையும் ஒரே வாரத்தில் திவ்யாவின் மேல் திணித்து விட்டு கிளம்பினான்.
ஒவ்வொரு இரவும் அவன் தரிசனத்திற்காக கணினி முன் தவம் கிடந்தாள். வெப் காமில் தெரிந்த அவன் முகம் அன்றைய இரவின் தூக்கத்திற்கு காரணமாய் அமைந்தது. பிரயாணத்திற்கு தன்னையும் தயார் செய்து கொள்ள திவ்யா பிரயத்தனபட்டாள்.
டாக்ஸி ஏறி ஏர்போர்ட் சென்று flight ஏறி அமரும் பொது இன்னும் சிறிது நேரத்தில் நேரில் பார்க்க போகும் பிரகாஷை நினைத்த உணர்ச்சிவசப்பட்டாள்.
லண்டன் ஏர்போர்டில் அவள் இறங்கி தன பெட்டிகளை எடுத்து கொண்டு வெளி வந்தபோது பிரகாஷ் காத்துகொண்டிருக்க வேண்டிய இடத்தில் Mrs . திவ்யா என ஒரு போர்டு ஏந்திய வாலிபன் நின்றுகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியானாள் திவ்யா.
பார்ட் 2 ரொம்ப சின்னதா போய்டுச்சு. ஆனா நல்ல சஸ்பென்ஸோட முடிச்சிட்டீங்க.
ReplyDeleteGood Twist. Awaiting part 3...
ReplyDelete