அந்த வாலிபன் தன்னை நிஷாந்த் எனவும் தான் பிரகாஷின் ப்ரொஜெக்டில் பணிபுரிவதாகவும் சொன்னான். பிரகாஷ் ப்ராஜெக்ட் விஷயமாக 3 நாள் வெளியூர் சென்றிருப்பது திவ்யாவிற்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஒரு சில நேரத்தில் இது பிரகாஷ் செய்யும் குறும்புகளில் ஒன்று எனவும் தோன்றியது. வீடு வந்து சேர்ந்த பின் திறந்த ஒவ்வொரு கதவின் பின்னால் பிரகாஷை எதிர் பார்த்து தோற்றாள். நிஷாந்த் வாங்கி தந்த ரொட்டியும் ஆரஞ்சு ஜூசும் இறங்க சிரமப்பட்டது. பழக்கமில்லாத குளிரும், பழக்கமில்லாத இடமும் திவ்யாவை தன் அறையிலேயே முடக்கிவிட்டது. இந்த முறை பிரகாஷ் ஏமாற்றாமல் 3 நாளில் வீடு திரும்பினான். அனால் அவனை வரவேற்கும் திராணி திவவிடம் இல்லாமல் போனது. மிகுந்த காய்ச்சலும் அசதியும் திவ்யாவை படுகையில் ஆழ்த்தியது. பிரகாஷ் டாக்டரை வீட்டிற்க்கே அழைத்து வந்து காமித்தான். மாத்திரைகளும் மருந்துகளும் பழங்களும் திவ்யாவிற்கு துணையானது. உடம்பு சரியானதும் ஊர் சுற்றி பார்க்கலாம் என கூறிய பிரகாஷ் இரண்டாம் நாளே மறுபடியும் வெளியூர் செல்ல வேண்டியதாயிற்று. தனக்கு பிடித்த ஆங்கில நாவல் ஒன்றை படித்துகொண்டு சோபாவில் திவ்யா சாய்ந்தபோது போன் சிணுங்கியது. பணியாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா என தேடிய திவ்யா யாரும் இல்லாததால் தானே போனை எடுத்தாள். "திவ்யா... நான் தான் பிரகாஷ் பேசறேன்.. தெரியும் நீ தான் போன் எடுப்பேன்னு... உடம்புக்கு இப்போ தேவலையா?" "ம்ம்ம்ம்...." "சாரி மா. என்னால இந்த முக்கியமான மீடிங்க அவாய்ட் பண்ண முடில. என் மேல கோவமா?" "....." "சரி... நான் ஒரு 2 -3 டேஸ்ல ரிடர்ன் வந்திருவேன். அது வர பத்திரமா இருமா... பை" ஏன் என்று தெரியாமல் திவ்யாவிற்கு இதயம் கனத்தது. ஒரு வேலை பெங்களூரில் இருந்திருந்தால் இந்த பிரிவு வலியை ஏற்படுத்தி இருக்காதோ என தோன்றியது. ஒரு விநாடி திவ்யாவின் கண்களில் கண்ணீர் தோன்றி மறைந்தது. நாம் மிகவும் எதிர்பார்க்கிறோம் இந்த எதிர்பார்ப்பு தப்பு என கூட தோன்றியது. ஆனால் ஏன் எதிர்பார்க்க கூடாது எனவும் தோன்றியது. பனியில் நனைந்து கதகதப்பை தேடிய ஒரு சிறு புறா ஒரு அடுக்கு மாடி வீட்டில் இடத்தை தேடி அமர்ந்து கொண்டதை பார்த்தபடி திவ்யா நின்றிருந்தாள். முன் கதவின் பக்கத்தில் நிழலாடுவதை போல தோன்றவே திரும்பி பார்க்கையில் அங்கே நிஷாந்த் புன்னகையோடும் கையில் ஒரு பெரிய பையுடனும் நின்றிருந்தான்.

Comments
Your story is incrementing intrest. Bravo!
ReplyDeleteUsha Rocks!
Dhivya paavam... We can feel Dhivya's pain.. Expecting next part......
ReplyDeleteThanks annachi! Hope my writing turns out to be more good in future.
ReplyDeleteThanks for your comments, Hari! The next chapter will have a different flavor. Hope it keeps you reading. :)