தூரத்தில் இருக்கும் வெளிச்சத்தை தேடி - 4

நிஷாந்தின் வருகையை சற்றும் எதிர் பார்க்காத திவ்யா அந்த பால்கனி கதவை தாண்டி வரும் போது அவள் கால் வாய்த்த அந்த நொடி விடியல் மறைந்து இருள் சூழ்ந்துகொண்டு கனமழை பெய்தது. செங்குத்தாக விழுந்ததால் அவள் தலையில் ஆணி அடித்தார் போன்ற வலி. கதவின் அருகிலிருந்து ஓடி வந்த நிஷாந்தோ அவன் பின்னால் ஓடி வந்த அந்த பெண்ணோ திவ்யாவிற்கு கண்ணில்படவில்லை. சில அதிர்ச்சி பரிமாற்றங்களும் லேசான அழுகை சத்தமும் அவள் செவியிலிருந்து விலகி கொண்டிருந்தது. எங்கோ தூக்கி செல்கின்றனர், லேசான மழை துளி அவள் மேல் விழுகிறது, போர்வை போர்த்தபடுகிறது, மருந்து வாடை, தோள்பட்டையில் ஏதோ ஒரு சிறு வலி... நினைவு மறந்து போனது திவ்யாவிற்கு.
திவ்யா ஆஸ்பத்திரி வாசலை அடைந்தபோது பிரகாஷிற்கு விஷயம் சொல்லப்பட்டது. கிடைத்த அடுத்த விமானத்தை பிடித்து பிரகாஷ் வந்து சேரும்போது திவ்யாவிற்கு ஆபரேஷன் முடிந்து ICUவிற்கு மாற்றி இருந்தார்கள். பிரகாஷ் உள்ளே அனுமதிக்க பட்டபோது திவ்யா சிதைந்த பொம்மை போல் படுத்திருந்தாள். தலையில் கட்டும் மூக்கு மற்றும் வாயில் இருந்து ஓடிய ட்யுபுகள் பிரகாஷை பயமுறுத்தின. குழந்தையாய் திவ்யா கண் மூடி படுத்திருந்த போது, பேசும் அவள் விழிகளை காண ஏங்கினான். அருகில் சென்று நீலமாகி போன அவள் இதழ்களில் தன் கைகளால் முத்தமிட்டான். படபடத்த அவள் விழிகள் மறு வினாடி அடங்கி போயின. நர்ஸ் வந்து அவளுக்கு மருந்து குடுக்க பிரகாஷை வெளியேற சொன்னாள். 
'பிரகாஷ். பயப்படதீங்க. ஒண்ணும் ஆகாது. ப்ளீஸ் டோன்'ட் லூஸ் ஹோப். சரியாய்டும்.'
'எப்படி... ஹொவ் டிட் ஷி?'
'பால்கனி லே இருந்து வந்தபோது ப்ரோசன் பனி மேல கால் வச்சிடாங்க. பாலன்ஸ் பண்ணும்போது பக்கத்துலே இருந்த அந்த ப்ளோவர் வேஸ் மேல விழுந்திட்டாங்க. உடைஞ்ச அந்த வேஸ் அவுங்க ஹெட் லே குத்தி...'
'...... டாக்டர் என்ன சொன்னார் நிஷாந்த்?'
'எல்லாம் சரியாயிடும்னு தான்...'
'டோன்ட் லை நிஷாந்த். ICU லே அவளை பாத்தா அப்படி இல்லை... டாக்டர் எப்போ வருவார். ஐ வான்ட் டு மீட் ஹிம்'
'டோன்ட் பாணிக் பிரகாஷ். டாக்டர் வந்ததும் நாம போய் பாக்கலாம்'
டாக்டர் அறையில் இருந்து பிரகாஷ் வெளியே வந்தபோது அவன் எதிர்காலம் உறைந்திருந்தது. ICU கதவை திறந்து உள்ளே நுழைந்து திவ்யா அருகில் அமர்ந்தான். அவனை வெளியேற சொல்ல நர்ஸ் ஓடி வந்தாள்.
'ஜஸ்ட் 2 மினிட்ஸ். ப்ளீஸ்.'
அவள் கைகள் சில்லிட்டு ஒரு பனிக்கட்டி போல் இருந்தது. அதை மெதுவாக தடவினான். அதில் ஓடிய மெல்லிய நரம்புகள் புடைத்திருந்தன. அவள் முகம் மேல் இருந்த அந்த முகமூடி அவள் மூச்சு விட உதவிக்கொண்டிருந்தது. அந்த அறையில் அவள் விடும் மூச்சு சத்தம் மட்டும் தான் கேட்டபது போல் உணர்ந்தான்.திவ்யா தன்னிடம் பேசிய மொழிகளில் ஒன்று இந்த மூச்சு காற்று. அவள் பேச விரும்புவதை அவள் மூச்சு காற்று தெள்ள தெளிவாக பேசும். சில சமயம் வேகமாக வெளிவந்து அவள் கோபத்தையும், சில சமயம் பெருமூசுகளாய் அவள் தாபத்தையும், சில சமயம் சீராக வந்து அவள் சந்தோஷத்தையும்...
கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது மழைக்காக ஒதுங்கிய அந்த மாலை வேலையில் பார்த்த தேவதை தான் திவ்யா. கடை வாசலில் காய் விற்கும் அந்த காய்கறி பாட்டிக்கும் தனக்கும் சேர்த்து குடை பிடித்து கொண்டு நின்றிருந்தாள். மழை நிற்கும் வரை அங்கேயே நின்றுகொண்டு பின் அவள் வீடு நோக்கி நடக்கலானாள். ஊரில் எந்த பெண்ணும் செய்திருக்கலாம் என்றாலும் இவள் பிரகாஷிற்கு பிடித்து தான் போனாள். அது பார்த்த உடன் காதல் என்று பிரகாஷால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவளை மறுமுறை சந்திப்போம் என்று உள்ளம் சொல்லியது. கோவையில் கல்லூரி படிப்பு முடிந்து வேலை கிடைத்து சென்னைக்கு பிரகாஷ் வந்த 2 வது வருடம் தன் நண்பனின் ஆபீசில் இன்டீரியர் டிசைன் செய்ய ஆர்டர் கேட்க போன அந்த கம்பெனியில் திவ்யாவை பார்த்தான். அவள் சிரித்த முகமும் பேசும் கண்களும் அவனை ஈர்த்தன. அவளை பார்க்கும் சார்பில் நண்பனுடன் அடிக்கடி அந்த டிசைனர் கம்பனிக்கு போனான். ஆனால் அவளுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் பெங்களூர் செல்ல வாய்ப்பு வந்ததால் தன் விதியை நொந்துகொண்டு பெங்களூர் சேர்ந்தான். ஆனால் அவளின் நினைவுகள் மட்டும் வந்து கொண்டு தான் இருந்தன. அந்த கண்கள் தான். அவனை இன்றும் அவளை எண்ணி ஏங்க வைக்கும் அந்த கண்கள் தான் அவனை இப்படி பைத்தியமாக்கியது. என்று சென்னை செல்வோம் என்ற ஏக்கத்திலேயே தூக்கம் தொலைத்தான். வேலையில் ஆழ்ந்து போய் 6 மாதம் கழித்து வந்த விடுப்பில் ஊருக்கு செல்லாமல் சென்னை வந்தான். அவன் நண்பனின் ஆபீசில் அடைந்த போது அந்த இன்டீரியர் அவனை வியப்பில் ஆழ்த்தியது.
'ரொம்ப அழகா பண்ணிருக்காங்க இன்டீரியர். நாம லாஸ்ட் டைம் பாத்த அதே கம்பெனி தானா?'
'ஆமாடா. அந்த பொண்ணு... திவ்யா ன்னு... சூப்பரா பண்ணி குடுத்திட்டாங்க. செம டாலேன்ட்.'
'ம்ம்ம்.. இன்டீரியர் பாத்தாலே தெரியுது. ரொம்ப இம்ப்ரேசிவா இருக்கு. வேலை முடிஞ்சதா இல்லை பெண்டிங் எதாச்சும் இருக்கா?'
'ஏன்டா... இந்த சாக்லே அந்த பொண்ணை சைட் அடிக்கலாம்னா?'
'டேய்.. ச்சே..'
'ஆனா.. பாவம் டா. அந்த பொண்ணு.. கடவுள் ஒண்ணு வாங்கிட்டு தான் இன்னொன்னு தருவார் போல...'
'வாட் டூ யு மீன்?'
'ஆமா பிரகாஷ். ஷி கான்ட் ஸ்பீக். ஷி இஸ் ம்யுட்.'
'.....'
'அப்பா. என்னை புரிஞ்சுபீங்கன்னு எதிர் பாக்கறேன். எனக்கு எது வேணும் வேணாம்னு டிசைட் பண்ற உரிமை நீங்க எல்லா விஷயத்திலும் எனக்கு குடுதிற்கீங்க. அது இது வரை சரியானதா தான் இருக்குன்னும் நீங்க சந்தோஷ பட்டு இருக்கீங்க. திஸ் இஸ் லைப். நான் இதிலே கண்டிப்பா தப்பு பண்ண மாட்டேன்பா.'
'எனக்கு இதுலே சொல்ல எதுவுமே இல்ல பிரகாஷ். ஒரு தியாகமா இல்லாம உன் மனசுக்கு பிடிச்சா மட்டும் பண்ணு. உன்னோட டெசீஷன் எனக்கு எப்பவமே தப்பா தெரிஞ்சதில்ல...'
இது எதுவுமே பிரகாஷ் இது வரை திவ்யாவிற்கு சொன்னதில்லை. அவளிடம் சொல்லும் விருப்பமும் பிரகாஷிற்கு இல்லை. அவள் தன் மேல் பரிதாபப்பட்டு மணம் முடித்ததாக ஒரு முறை எண்ணி விட்டாலும் பிரகாஷ் உடைந்து போவான். ஆனால் இன்று சொன்னான். அந்த ICU வில் அமர்ந்து அவள் இதயத்துடன் பேசி கொண்டிருந்தான். அவள் கைகளை பற்றி கொண்டு அன்று அவள் கண்களால் பேசிய வார்த்தைகளை பகிர்ந்துகொண்டிருந்தான். அவள் உடுத்திய உடைகளை நினைவுபடுத்தினான். அவள் பார்த்த காட்சிகளை விவரித்தான். அவள் பேச முடியாமல் போன வார்த்தைகளை பேசி தீர்த்தான்.
நர்ஸ் அருகில் வந்து தன் தோளில் கை வைத்தபோது நினைவு வந்து திரும்பினான். அவள் கடிகாரத்தை காட்டினாள். அவன் அங்கிருந்து எழ முற்பட்டபோது திவ்யா அருகிலிருந்த அந்த மஷினிலிருந்து பீப் சத்தம் வந்தது. நர்ஸ் விரைவாக பசறை அழுத்தி டாக்டரை அழைத்தாள். பிரகாஷ் வெளியேற்றபட்டான். சில மருந்து தட்டுகளும் வெள்ளை உடுத்திய ஆட்களும் உள்ளே வெளியே நடந்தனர்.
'Mr. பிரகாஷ். யு மே ஹவ் டு கம் இன்.' நர்ஸ் அழைத்தபோது பிரகாஷிற்கு இன்னுமே நம்பிக்கை இருந்தது.
உள்ளே சென்ற போது திவ்யாவின் கண்கள் விரைவாக துடித்து கொண்டிருந்தது. அவள் மூக்கில் இருந்து ஒருவிதமான திரவம் வெளிவந்துகொண்டிருந்தது.
'Cereberospinal liquid . வீ ஆர் லூசிங் ஹேர்' என்றார் டாக்டர்.
அருகில் சென்றபோது பிரகாஷிற்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன செய்தால் திவ்யா கண் திறப்பால் என்று புரியவில்லை. அவள் காதருகில் குனிந்தான்... அவள் கைகளை இறுக பற்றிகொண்டான்.
'ஐ லவ் யு திவ்யா...'
'.....' அவள் இறுதி மூச்சு காற்று பிரகாஷின் அந்த வார்த்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியது.
'அயம் சாரி பிரகாஷ்...' டாக்டர் அவனை அணைக்க முற்பட்டபோது கீழே சரிந்தான் பிரகாஷ்.

Comments

  1. ella emotionsum ore partla potu mudichiteenga.. intha part is easily the best of the rest..

    ReplyDelete
  2. Thanks Manu! Train payanam ennai nalla sindhikka thoondichi! Thanks to my trip this weekend :)

    ReplyDelete
  3. Very emotional..over weight in this part:'-(

    ReplyDelete
  4. Nice story. Awaiting the next part...

    ReplyDelete
  5. Thank you, Som! Never knew u cud read Tamil :) Next part coming soon!

    ReplyDelete

Post a Comment

What do you think? Please share your views...