தூரத்தில் இருக்கும் வெளிச்சத்தை தேடி - 5

"பிரகாஷ்.. பிரகாஷ்.. வேக் அப். பிரகாஷ்.."
கண்களை திறக்க பிடிக்கவில்லை. கண்கள் திறந்தால் நிஜம் நிலையாகிவிடும் என்ற பயம் பிரகாஷிற்கு. கண்கள் திறந்தால் திவ்யா தன்னுடன் இல்லை என்ற உண்மை புரிந்துவிடும்.
"திவ்யா... திவ்யா" இது மட்டுமே பிரகாஷால் பேச முடிந்தது.
டாக்டர் கொடுத்திருந்த மருந்து வேலை செய்து தான் தீர்ந்தது. பிரகாஷ் சுயநினைவை அடைய தொடங்கினான். அந்த சுயநிலை பிரகாஷை சூரியனாய் சுட்டது. உயிரற்ற தன் திவ்யா மறு அறையில் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு என்னமோ செய்தது.

அந்த 16 நாட்கள். பிரகாஷ் வாழ்வில் மறக்க நினைத்த அந்த நொடி பொழுதுகள். திவ்யாவுடன் பிரகாஷ் இந்தியா வந்து சேர்ந்த மறு நாள் திவ்யா பிரகாஷின் அரவணைப்பில் இருந்து விடுபட்டு போனாள். தீ பிளம்புகள் அவள் உடல் தழுவியபோது எரிந்து தான் போனான் பிரகாஷ். மயானத்தை விட்டு வர மறுத்த அவனை உறவினர் இழுத்து கொண்டு சென்றனர். வீட்டில் ஒரே அழுகை சத்தமும் திவ்யா அழிந்ததிற்கான சுவடுகள் மட்டும் தான் மிஞ்சியிருந்தன. தன் வருத்தம் தன் பெற்றோருக்கு சுமையாக இருக்க கருதி பிரகாஷ் உடனேயே பெங்களூர் சென்றான்.

எல்லாவற்றிலும் திவ்யாவின் வாசனை. அவள் ஸ்பரிசம் பெற்ற பொருட்கள். இதை எல்லாம் அப்புற படுத்த வேண்டுமென அம்மா சொல்லி அனுப்பியிருந்தார். அவள் உபயோகபடுத்திய துணிகள் அவன் அலமாரியில் குவிந்திருந்தன. டிரெஸ்ஸிங் டேபிள் மேல் அவள் கிளிப்கள். குளியறையில் அவள் சோப்பு. இதை எல்லாம் தூக்கி எறிய முடியும் ஆனால் திவ்யாவின் நினைவலைகளை?

நிஷாந்த் வந்திருந்தான். தன் கவலைகளை பங்கு போட்டுக்கொள்ள ஒரு நண்பனாய். திவ்யாவின் பொருள்களை சேகரித்து இரண்டு பெட்டியில் அடைத்தனர். அது பரண் மேல் பதுங்கியது. இருவருக்கும் காபி போட்டுகொண்டு சோபாவில் சாய்ந்தனர்.

"அப்புறம். நீ எப்போ ரிடன் ஆகறே நிஷாந்த்?"
"இன்னும் டிக்கெட் புக் பண்ணலே. இன்னும் 3 வீக்ஸ் ஆகும்."
என்ன பேசுவது என்று இருவருக்கும் விளங்கவில்லை. ஒரு மாதிரியான மௌன திரை அவர்கள் இருவர் மத்தியில் நிலவியது. அது இருவரையும் சங்கடமாக ஆக்கியது. நிஷாந்த் மௌனத்தை உடைத்தான்.
"திவ்யா இங்க வந்திருக்கா பிரகாஷ்."
ஒரு விநாடி, ஒரே ஒரு விநாடி இதயம் நின்று துடித்தது. கண்கள் பனித்தது. உணர்வுகள் உறைந்தது.
நிஷாந்த் அதை பார்த்துவிட்டான்.
"ஐ மீன்... அயம் சாரி பிரகாஷ்..."
"இல்ல.. இட்ஸ் ஓகே. திவ்யஸ்ரீ தானே"
"ஆமா. அன்னைக்கு அக்சிடென்ட் அப்போ என் கூட திவ்யஸ்ரீ இருந்தா. திவ்யாவை பாக்க வந்திருந்தா. ஒரு ட்ரிப் காக வந்திருந்தா. நாங்க ரெண்டு பெரும் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்"
"ஒ..."
"ஷி வாண்ட்ஸ் டு மீட் யு, பிரகாஷ்"
"....."

அந்த காபி ஷாப்பில் அத்தனை கூட்டமில்லை. ஓரமாக இருந்த ஒரு டேபிளில் பிரகாஷ் காத்திருந்தான்.
"ஹாய் பிரகாஷ். சாரி.. லேட் பண்ணிட்டேனா?"
"ஹாய்.. இல்ல.. நான் இப்போ தான் வந்தேன்..."
"ஹொவ் ஆர் யு பிரகாஷ்? ஏன் இப்படி தாடி எல்லாம் வளத்துகிட்டு சோகமயமா இருக்கே?"
"...."
"என்ன பேச்சே காணோம்?"
"இருக்கேன்... நல்லா இருக்கேன்"
"அட்வைசென்னு நினைக்காதே. நீ என்ன சின்ன பிள்ளையா?"
"..."
"ம்ம்ம்.. லைப் ஹாஸ் டு கோ அன். நீ எனக்கு காலேஜ் லே சொன்னது. ஞாபகம் இருக்கா?. நீ திவ்யாவை எவ்ளோ காதலிச்சேன்னு எனக்கு தெரியும். ஆனா அவள நினைச்சு நீ இப்படி ஆகுறநாலே யாருக்கு என்ன லாபம்?
"...."
"நேத்து அப்பா பேசினார். உன்னை நினைச்சு ரொம்ப பீல் பண்றார். ஏன் உன்னோட லண்டன் ட்ரிப் கான்ஸல் பண்ண? இங்கேயே அந்த வீட்லேயே இருந்து என்ன சாதிக்க போறே?"
"...."
"இது நல்லா இருக்கு. நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்... சரி.. எதாச்சும் ஆர்டர் பண்ணியா சோம்பேறி?"
"இல்ல"
"ஹலோ... ரெண்டு கபே மோக்கா" ஐந்து நிமிடத்தில் இரண்டு காபி கோப்பைகள் அங்கு வந்து சேர்ந்தது.

"பிரகாஷ்... இப்படி டல்லா இருந்தா என்னப்பா அர்த்தம்? உன்னை ஒண்ணும் நான் திவ்யாவை மறக்க சொல்லலே... ஆனா உன் வாழ்கையை ஏன் தொலைக்கிறே? உன்னோட எதிர்காலத்த பத்தி யோசிக்க இது நல்ல டைம் இல்ல தான்... ஆனா... அட்லீஸ்ட் நீ நார்மலா மாறனும். ஏதாச்சும்  பேசேன்"

"என்னால வேலைக்கு போய் கவனம் செலுத்த முடியும்னு எனக்கு தோணலை ஸ்ரீ. அங்க போனா திவ்யா ஞாபகமாவே இருக்குமோன்னு பயமா இருக்கு..."

"கமான். இவ்ளோ கோழையா நீ? உன்னால தைரியமா லைப் எ பேஸ் பண்ண முடியாது? சோ சில்லி. திவ்யாவை நீ மறக்க நினைகறேன்னு உன் பேச்சிலேயே தெரியுது."

"என்ன சொல்றே நீ?"

"பின்ன.. என்னை ஸ்ரீ ன்னு எத்தனை நாளா கூப்பிட ஆரம்பிச்சே? திவ்யான்ற பேரை சொல்ல விருப்ப படலேன்னு தானே அர்த்தம்?"

"யு டோன்ட் அண்டர்ஸ்டான்ட்."

"என்ன எனக்கு புரில? லூசு மாதிரி பேசாதே..."

இரவு உறங்கும் போது அப்படி தான் தோன்றியது... பைத்தியம் தானா? திவ்யா மேல்? மறக்க முடியும் என்ற எண்ணம் சற்றும் இல்லை. மறக்க நினைக்கும் அந்த உணர்வுகள் பயமாக தான் இருந்தது. 

என்ன நினைத்தானோ. அடுத்த நாள் எழுந்து ஆபீஸ் சென்றான். எதிர்பாராத இவன் வருகை இவன் சக நண்பர்களிடையே ஒரு வித இறுக்கமான சூழ்நிலை உண்டாக்கியது. ஆனால் இயல்பாக பேச முயற்சி செய்தனர். இது பிரகாஷிற்கு ஒரு வித மாற்றமாக தான் இருந்தது. தினம் ஆபீஸ் வர முடிவெடுத்தான்.

ஆனால் இரவு மட்டும் அந்த பைத்தியம் பிடித்து கொண்டது. உறக்கம் வரவில்லை. ஒரு வித பதட்டம். கண்கள் திவ்யாவை மட்டுமே திரையாக காட்டின. கண்களை மூட பிடிக்கவில்லை. உறக்கம் ஒரு சுமையாக தான் வந்தது.

ஒவ்வொரு வாரமும் நிஷாந்தும் திவ்யஸ்ரீயும் வந்தனர். திவ்யஸ்ரீ பிரகாஷை மாற்ற முயற்சித்தாள். குழந்தைகள் இல்லம் கூட்டி சென்றாள். ஷாபிங் கூட்டி சென்றாள். ஏதாவது வித்தியாசமாக சமைத்தால் அதை இவனுக்காக எடுத்து வந்தாள். பிரகாஷின் இதயம் லேசாக தொடங்கியது. திவ்யா பிரகாஷ் மனதிலிருந்து விட்டு விலகவில்லை ஆனால் சற்று தள்ளி நின்றுகொண்டாள். அவள் நினைவலைகள் அவனுக்கு சகஜமாக மாற தொடங்கியது. சில சமயம் திவ்யஸ்ரீயின் சில செயல்கள் அவனுக்கு திவ்யாவை நினைவூட்டியது.

"திவ்யா.. சில சமயம் நீ என்னோட திவ்யாவை நினைவு படுத்தற, தெரியுமா?"
"நிஜமாவா? காலேஜ்லே படிக்கும் போது உன்னோட திவ்யாவை அடிச்சிக்க ஆள் இல்லைன்னு சொல்லுவே.."
"அது உண்மை தான். பட் ஸ்டில்..." சிரித்துகொண்டே சொன்னான். 

அன்று இரவு 12 ஐ நெருங்கி கொண்டிருந்தது நேரம். தூக்கமில்லாமல் திணறி கொண்டிருந்தவன் அப்படியே சோபாவில் சாய்ந்து உறங்கி போயிருந்தான். அப்போது அந்த செல்போன் அடித்தது. தூக்க கலக்கத்தோடு அதை காதில் வைத்தான்.

"பிரகாஷ். திவ்யா பேசறேன்..."
"திவ்யா.. திவ்யா..." தூக்கத்தில் அரற்றினான்.
"ஹாப்பி பர்த்டே, பிரகாஷ். நீ தூங்கு. மார்னிங் கால் பண்றேன்" 

விழிக்கும் போது பிரகாஷிர்க்குள் ஏற்பட்டிருந்த மாற்றம் அவனுக்கு ஒருவித சங்கடத்தை குடுத்தது. எழுந்து குளித்து விட்டு கோயிலுக்கு சென்றான். தரிசனம் முடிந்து யாரும் இல்லாத இடமாக பார்த்து அமர்ந்து கொண்டான். நெஞ்சில் ஆயிரம் எண்ணங்கள். முதல் முறை தன் திவ்யாவை துணைக்கு அழைத்தான். 

"திவ்யா.. நீ எங்க இருக்கே? என்னோட படபடப்பும் கஷ்டமும் உனக்கு புரியுதா? என்னை ஏன் இப்படி தனியா விட்டுட்டு போன? என்னோட குழப்ப நிலை உனக்கு புரியுதா? நான் என்ன செயனும்னு எனக்கு தெரில. பயமா இருக்கு. நான் உன்னை ஒவ்வொரு முறை தனியா விட்டுட்டு போனப்போ உனக்கும் இப்படி தான் பயமா இருந்திற்குமோ? சில சமயம் உன்னோட இந்த நிலைக்கான முழு காரணம் நான் தான்னு தோணுது. அப்படியா திவ்யா? என்னை அதுக்காக மன்னிப்பியா? நான் திரும்பி வருவேன்னு எதிர்பாதிட்டே நீ எப்படி துடிச்சி போயிருப்பே. ஆனா நீ திரும்ப வர மாட்டியான்னு எனக்கு ஏக்கமா இருக்கு. சில சமயம் திவ்யஸ்ரீய பாத்தா எனக்கு உன்னை பாக்கற மாதிரி இருக்கு. உன்னால பேச முடிஞ்சிருந்தா நீ அவளை மாதிரி தான் பேசி இருப்பேன்னு எனக்கு தோணிட்டே இருக்கு. பெயர் ஒத்துமயாலே கூட இருக்காலம். ஆனா அவ உன்னை மாதிரி தான். நான் இப்படி நினைக்கறது தப்பான்னு தெரில. ஆனா எனக்கு உன் நினைவுகள் பக்கதுலே இருக்கிற ஒரு விஷயம் திவ்யஸ்ரீ. என்னோட இந்த குழபத்த நான் அவள்டேயே பேசிட போறேன். இது என்னனு எனக்கு தெரில.. ஆனா உன் அருகாமை எனக்கு வேணும் திவ்யா. ஐ மிஸ் யு சோ மச் திவ்யா..." கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது பிரகாஷிற்கு.

Comments

  1. நான் போன பகுதியோட கதை முடிஞ்சிடுசுனு நெனச்சேன். :)

    இந்த பார்ட் தான் பெஸ்ட்னு தோணுது. பிரகாஷோட எமோஷன்ஸ் நல்லா எக்ஸ்பிரஸ் பண்ணிருக்கீங்க.

    ReplyDelete
  2. :) Thanks, Manu. Last part oda mudichirundha kadhai oda arambathila vandha andha oru paragraph kku artham illaama poidum :) Next chapter oda mutrum...

    ReplyDelete
  3. Hey! You are going at best pace !-)congrats!!

    ReplyDelete

Post a Comment

What do you think? Please share your views...