"இந்த லாப்ட் மேல இருக்கிற பாக்ஸ் எடுங்க எண்டு நேத்து தான சொன்னேன்... உங்க மகன் எழுந்ததும் சண்டைக்கு வர போறான்". நித்யா சத்தம் போட்டு கொண்டு அடுப்பறைக்கு போனாள்.
நித்யா... 1998ல் நானும் அவளும் ஒன்றாக கல்லூரியில் படித்தோம். கல்லூரி என்றதும் என் நினைவில் வருவதெல்லாம் காயத்ரி மட்டுமே. காயத்ரி... அத்தனை அமைதி... அத்தனை அழகு... அவளை பார்க்கும் பொழுதெல்லாம் என் இதயம் துடிப்பதை மறந்து பறக்கும். அவள் பேச்சும் சிரிப்பும் ஒரு நொடி விடாமல் அவளை பார்த்து கொண்டே இருப்பேன். அவளுக்கும் என்னை பிடிக்கும் என்று தெரியும். நான் எழுதும் சின்ன சின்ன கவிதைகளை படித்து ரசிப்பாள் என்றும் தெரியும். நான் இல்லாத நேரத்தில் என்னை பற்றி என் நண்பர்களிடம் விசாரிப்பாள் என்றும் தெரியும். எங்களுடன் ஒரே வகுப்பில் நித்யாவும் படித்தாள். என் நண்பன் ரோஷனிற்கு நித்யா என்றால் விருப்பம். அவன் வட மாநிலம். எங்களுடன் பழகிய 4 வருடத்தில் தமிழ் பேச மட்டும் கற்றுக்கொண்டான். எங்கள் இருவருக்கும் காதலை வெளிப்படையாக சொல்வதில் ஒரு சில பிரச்சனைகள். எனக்கு இதயம் படம் முரளி போல குடல் எல்லாம் பிரட்டும் அளவு பயம். என் காதலை பற்றி என் நண்பர்களுக்கு கூட தெரியாது. என் காதல் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்ற தவிப்பு எனக்கு அதிகம். ஆனால் ரோஷன் அப்படியல்ல. அவன் காதல் எங்கள் நண்பர்களுக்கிடையே பெரும் பிரபலம். அவனுக்கு தமிழில் தன் காதலை சொல்ல வேண்டும் என்று குறிக்கோள். இறுதி வரை நானும் என் காதல் சொல்லவில்லை அவனும் தமிழ் மொழியினை எழுத படிக்க கற்கவில்லை. ஒரு சில நாட்களில் எனக்கு காம்பஸ் இன்டெர்வியூயில் வேலை கிடைத்தது. அடுத்த ஓரிரு மாதத்தில் பெங்களூரு போக வேண்டிய நிலை.
இறுதி பேப்பர் முடிந்து எல்லாரும் விடைபெறும் நேரம் ரோஷன் வேகமாக என்னிடம் வந்தான். "மச்சான்... ஹெல்ப் பண்ணுடா... இந்த லெட்டர் இதை தமிழிலே டிரான்ஸ்லேட் பண்ணி குடுடா மச்சான்” என்று கெஞ்சினான். நேர விரைவில் நானும் ஒரு சில கவிதை வரிகள் எழுதி அவன் கையில் திணித்தேன். "ஆல் தி பெஸ்ட், மச்சான்... உனக்காச்சும் ஒர்க் அவுட் ஆகட்டும்" என்று மனதில் நினைத்து கொண்டேன்.
ஆறு மாதம் கழிந்து நித்யாவின் அப்பா வீட்டிற்கு வந்திருந்தார் என்று அம்மா சொன்னாள். எங்களுக்கு 1 வருடம் போய் திருமணம் நிச்சயமானது. அடுத்த 2 வருடத்திலேயே எனக்கும் நித்யாவிற்கும் திருமணம் முடிந்தது. எத்தனையோ முறை ரோஷனிடம் பேச முயன்றேன். என்னை சுத்தமாக புறக்கணிப்பது போல் இருந்தது. எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் கூட என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
அடுப்பறையில் சத்தம் கேட்டு நினைவு தெளிந்தேன். 10 வருடம் முடிந்து போனது. காயத்ரி சிங்கப்பூரில் திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளோடு இருப்பது தெரிந்தது. ரோஷன் USல் இருக்கிறான். எனக்கு இப்பொழுது பரண் மேல் இருக்கும் பெட்டியை இறக்குவது தான் வேலை.
பழைய புத்தகங்கள்.. சில புகைப்படங்கள். என் மகனுக்கு ஸ்கூல் ப்ராஜெக்ட் செய்ய வேண்டுமாம். பழைய புகைப்படங்கள் வைத்து ஏதோ எழுத வேண்டுமாம். 10-15 புகைப்படங்கள் எடுத்து வெளிய வைத்தேன். சில எங்கள் அப்பாவோடு ட்ரிப் போனபோது எடுத்த புகைப்படங்கள். சில நித்யாவுடையது. ஒரு பழைய புத்தகத்தின் நடுவே என்னுடைய கையெழுத்தில் ஒரு கடிதம். இது நான் எழுதிய ரோஷன் நித்யாவிற்க்கு கொடுக்க நினைத்த கடிதம். அந்த கடிதம் நித்யா இன்னும் வைத்திருப்பதானால் அவளும் ரோஷனை... ஓ மை காட்.. அந்த கடிதத்தை எடுத்து படித்தேன்.. என் கவிதை மழை.. குண்டு குண்டாக என் தமிழ் வார்த்தைகள்.
"அன்பான நித்யா...
நான் விழி மூடும் தருணம் என் வெளிச்ச கீற்றாய் நீ...
என் வழி மாறிய பயணத்தின் இலக்கும் கூட நீ...
நான் பேச இயலா மொழியின் அர்த்தம் எல்லாம் நீ...
நான் பேச நினைக்கும் தமிழின் செய்யுளும் இலக்கணமும் நீ...
உன் பதிலின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு நிற்கும் என் உயிர்
நீ ம்ம் என்று சொல்ல காத்திருக்கும் உன் உதட்டசைவின் ஏக்கத்தில் நான்...
- உயிருக்கு உயிராக உனை நினைத்து ஏங்கி நிற்கும்,
மதன் "
மறுபடியும் படித்தேன்... 10 முறை... 20 முறை...
மதன்... மதன்...
என் முகத்தில் வியர்வை வடிந்தது...
மதன்...
என் பெயர் மதன்...

Comments
Post a Comment
What do you think? Please share your views...